fbpx

விருது விழாவில் அவமானத்தை சந்தித்த பிரபலம்! இரவும் முழுவதும் நினைத்து தூங்காத பாலிவுட் நடிகை

நடிகை வித்யாபாலனுக்கு விருது வழங்கியபோது ஏற்பட்ட அவமானத்தை நினைத்து தூங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன், தமிழிலில் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். மறைந்த சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த நிலையில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நம்முடன் அவர் பகிர்ந்துள்ளார். தான் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டேன்.

அப்போது, ‘ஹேய் பேபி’ படத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கொடுத்தனர். அது ரசிகர்களின் ஆதரவை பெறாததற்கான விருது. அந்த விருதை அறிவித்தபோது, எனது உடைகள் நான் தேர்வு செய்தது அல்ல. ஆடை வடிவமைப்பாளர்தான் தயார் செய்து கொடுத்தார் என்றேன். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. அந்த நேரத்தில் தான் தைரியமாக பேசமுடியாமல் தவித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், அந்த விருதை மவுனமாக வாங்கிக்கொண்டதாகவும், அந்த அவமானத்தை நினைத்து அன்று இரவெல்லாம் தான் தூங்கவில்லை என்றார். தனிமையாக இருப்பதுபோல் உணர்ந்தேன். சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்கு வந்தால் இதுபோன்ற அவமானங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டதாகவும், தனக்கு மாடர்ன் உடைகளை விட புடவை அணிவது மிகவும் பிடிக்கும்” என்றும் கூறினார்.

கிழிந்த ரூபாய் நோட்டுகளை இனி ஈசியாக மாற்றலாம்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!

shyamala

Next Post

ஹீட் ஸ்ட்ரோக்!… வீட்டிலேயே இந்த கலர் தெரபி சிகிச்சையை செய்து பாருங்கள்!

Sun Apr 28 , 2024
Heat stroke: இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வெப்ப பக்கவாத பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெயில் பாதிப்பினால் உடலில் வெப்பம் அதிகரித்து நீர்ச்சத்து குறைந்து வறட்சி ஏற்பட்டு சோர்வு, களைப்பு, மயக்கம் உண்டாகிறது. வெப்ப தாக்குதல் மிகவும் அதிகமானால் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் ‘வெப்ப பக்கவாதம் வரலாம். இந்த பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால், மூளை, […]

You May Like