fbpx

கல்யாணமாகி சில நாட்களிலேயே விவாகரத்தா..! 3 மாதம் அப்புறம் கூட பரவால்ல..! ரோபோ ஷங்கர் மகள்..!

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள், விவாகரத்து குறித்து எமோஷனலாக பேசியுள்ளார்.

பிரபல காமெடி நடிகரான ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் விருமன் படத்தில் நடித்துள்ளார். இவருடைய திருமணம் சமீபத்தில் மதுரையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து, சென்னையில் திரை பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்காக பெரிய அளவில் ரிசப்ஷன் நடத்தப்பட்டது. இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒவ்வொரு நிகழ்வையும் இந்திரஜா வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் மிகவும் பேசுபொருளாகி வருகிறது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திரஜா சங்கர், தனக்கு வரும் தவறான கமெண்ட் குறித்து எமோஷனாகி உள்ளார். மனசாட்சி இல்லாமல் சிலர் கமெண்ட் பன்றாங்க என்றும், அவுங்க பேர நான் மறந்து விட்டதாகவும், அவுங்க, “இன்னும் எத்தனை நாள் இந்த ஜோடி ஆட போகுதுனு பாக்கலாம் கொஞ்சம் மாசத்துல தனி தனியா பேட்டி கொடுப்பாங்க. விவாகரத்து நடக்கும்” என்று கமெண்ட் செய்து இருந்ததாக குறிப்பிட்டார்.

அந்த கமெண்ட்டுக்கு பதிலளிக்கும் வகையில், எங்க மாமா மூன்று முடிச்சி strong-ஆக போட்டு இருக்காரு என்றார். இப்படி சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வருது என்றும், 3 மாதங்கள் கடந்து கூறினால் கூட பரவால்ல, நான் கோபப்பட்டு இருக்கமாட்டேன் எனவும் ஆவேஷமாக தெரிவித்தார். ஒரு நல்ல விஷயம் நடக்கும்போது எப்படி இந்த மாதிரி கமெண்ட் அடிக்கிறாங்கனு தெரியவில்லை என்று மனவேதனைகளை ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா கூறியுள்ளார்.  

Dairy Milk சாக்லேட்டில் பூஞ்சை தொற்று.!! அதிர்ச்சியில் உறைந்த ஹைதராபாத் நபர்.!! விளக்கமளித்த கேட்பரி நிறுவனம்.!!

shyamala

Next Post

மக்களே..!! ATM கார்டை மட்டும் தவற விட்றாதீங்க..!! இப்படியும் பணம் பறிபோகுமா..?

Tue Apr 30 , 2024
தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறதோ, அதே அளவுக்கு மோசடி சம்பவங்களும் அதிகரித்துள்ளது. அதனால்தான் பொதுமக்களுக்கு, நம்முடைய காவல்துறை எந்நேரமும் விழிப்புணர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கியபடியே உள்ளது. இதோ இப்போதும் பொதுமக்களின் நன்மை கருதி, ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், ”சென்னை சூளைமேடு, வன்னியர் தெருவில் வசிப்பவர் கார்த்திக்வேந்தன். இவரது ஏடிஎம் கார்ட் கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று தொலைந்து போயுள்ளது. கார்த்திக்வேந்தனின் ஏடிஎம் கார்டை […]

You May Like