fbpx

புதுவீட்டை ரசித்து பார்த்த ரஜினி..! மனைவியுடன் குத்துவிளக்கு ஏற்றி ரசித்த வீடியோ…!

நடிகர் ரஜினி புதிய வீட்டிற்கு சென்ற லேட்டஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் சமூக கருத்தை மையப்படுத்தி மக்களுக்கு கருத்தை சொல்லும் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில், 30 ஆண்டுகளுக்கு பின் ரஜினி, அமிதாப் பச்சனுடன் இணைந்துள்ளார். மேலும், ராணா டகுபாட்டி, மஞ்சு வாரியர், ஃபகத் பாசில், ரித்திகா சிங் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி தனது 171வது படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படத்துக்கு ‘கூலி’என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான டைட்டில் அறிமுக வீடியோவை அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரஜினி தனது குடும்பத்துடன் இருக்கும் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், ரஜினி, தனது மனைவி, மகள், பேரன்களுடன் வீட்டை சுற்றிப்பார்க்கின்றனர். அதில், ரஜினியும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் குத்துவிளக்கு ஏற்றி வைக்கின்றனர். இதனால், இந்த புதிய வீட்டை இவர்கள் வாங்கினார்களா அல்லது மகள் ஐஸ்வர்யாவின் தோழி வீட்டிற்கு சென்றனரா என்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read More: இயக்குநர் தரணியை பார்க்க நோ சொன்ன விஜய்! கில்லி ரீ-ரிலீஸ்க்கு பிறகு ட்விஸ்ட்!

shyamala

Next Post

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? உங்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!

Wed May 1 , 2024
மக்களவை தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதன் காரணமாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்க போகிறது என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் உள்ளன. மானிய விலையிலும், விலையில்லாமலும் அரிசி சர்க்கரை, பருப்புகள், பாமாயில் […]

You May Like