fbpx

விவாகரத்தா? சூர்யாவிடம் இது பிடிக்காததால்…! நடிகை ஜோதிகா ஓபன் டாக்..!

சூர்யா – ஜோதிகா இருவரிடையே விவாகரத்து குறித்து நடிகை ஜோதிகா பேட்டியளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, சிறிது காலம் நடிப்பதற்கு ஓய்வளித்த அவர், தற்போது முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சைத்தான் படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார்.

அண்மையில் சூர்யா – ஜோதிகா இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ஜோதிகா மும்பையிலும், சூர்யா சென்னையிலும் தனி, தனியாக பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் ஜோதிகா மற்றும் சூர்யா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், விவாகரத்து பெறவுள்ளதாகவும் பல கிசுகிசுக்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், சூர்யா குடும்பத்திலும், சினிமாவிலும் 200 சதவீதம் சிறப்பாக செயல்படக்கூடியவர். கங்குவா திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது என ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்திற்காக சூர்யா பல நாட்களாக அதே அதே ஹேர் கட்டுடன் உள்ளார். அது மட்டும் தான் கொஞ்சம் பிடிக்கவில்லை. விரைவில் அவருக்கு ஹேர் கட் பண்ணி விட வேண்டும் என ஜாலியாக பேசியுள்ளார் ஜோதிகா.

சிலர் வேண்டுமென்றே கொளுத்திப் போடுவது தவறான செயல் எனவும், தேவையற்ற வதந்திகளை ரசிகர்கள் நம்பவேண்டாம் என்றும் விவாகரத்து குறித்து எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜோதிகா.

Karnataka Scandal | “பிரஜ்வல் ரேவண்ணா பகவான் கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க முயற்சி..” சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் அமைச்சர்.!!

shyamala

Next Post

உங்கள் வீட்டில் மணி பிளான்ட் செடி வைக்கப்போறீங்களா..? இவ்வளவு நன்மைகளா..? எப்படி பராமரிப்பது..?

Fri May 3 , 2024
மணி பிளான்ட் செடிகள் தரும் பல்வேறு மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா? மணி பிளான்ட் செடிகள் சரியாக வளரவில்லையா? இதோ சூப்பரான டிப்ஸ்… காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும் தன்மை இந்த மணிபிளான்ட்டுக்கு உண்டு. இதன் காரணாக, நம்மை சுற்றியுள்ள மாசு காற்று உள்வாங்கப்பட்டு, நமக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நல்ல ஆக்ஸிஜைனை வெளியிடுகிறது. அந்தவகையில், ஆக்ஸிஜனை வெளியிடும் தாவரங்களில் முதலிடத்திலும் […]

You May Like