fbpx

டிடிஎப் வாசனுடன் பீச்சில் குளிக்கும் குக் வித் கோமாளி நடிகை ஷாலின் சோயா…!

டிடிஎப் வாசனுடன் குக் வித் கோமாளி பிரபலம் நடிகை ஷாலின் சோயா சேர்ந்து சுற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், அந்நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி உள்ளது. இதுவரை நான்கு சீசன்களில் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட் அந்நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில் அவருக்கு பதிலாக புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கி உள்ளார். அவர் செஃப் தாமு உடன் இணைந்து இந்த சீசனில் நடுவராக பங்கேற்று உள்ளார்.

இந்த சீசனில் ராமர் கோமாளியாக களமிறங்கியுள்ளார். இதுதவிர புகழ், சுனிதா, குரேஷி ஆகியோரும் இடம்பெற்று இருப்பதால் இந்த சீசனில் காமெடிக்கு பஞ்சமிருக்காது. அதுமட்டுமின்றி போட்டியாளர்களாக விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளினி பிரியங்கா, பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, டிரெண்டிங் நடிகை திவ்யா துரைசாமி, புகழ்பெற்ற யூடியூப்பரான முகமது இர்ஃபான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சீசனில் இடம்பெற்றுள்ள நடிகை ஷாலின் சோயா, யூடியூப்பர் டிடிஎப் வாசனுடன் நெருங்கி பழகி வருவதால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் உலா வந்தன. அந்த வகையில், டிடிஎப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேரளா சென்றுள்ள டிடிஎப் வாசனுடன் ஷாலின் சோயா, ஒன்றாக காரில் பயணிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அவர்கள் இருவரும் பீச்சில் குளிக்கின்றனர்.

இதையெல்லம் வைத்து பார்க்கும்போது வதந்திகள் உண்மை தான் என்ற எண்ணம் தோன்றுகின்றன.நடிகை ஷாலின் சோயா தமிழில் ராஜா மந்திரி, கண்ணகி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய சீசன்களில் கலந்துகொண்டு பிரபலமான ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷா குப்தா ஆகியோர் வரிசையில் ஷாலின் சோயாவும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘என் துணைக்கு நீ தான்.. உன் துணைக்கு நான் தான்’ மொரிஷியஸில் தனியாக ஜில் செய்யும் இளையராஜா!

shyamala

Next Post

18 மாவட்ட கல்வி அலுவலர் நியமனம் ரத்து... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Fri May 3 , 2024
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020ம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான […]

You May Like