kajal agarwal : தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர், திருமணத்துக்கு பின்னர் மார்க்கெட் இழந்துவிட்டார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்பவருடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தையும் பிறந்தது. காஜல் அகர்வால் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.
ஷங்கர் இயக்கும் இப்படத்தில் திருமணத்துக்கு முன்னரே கமிட் ஆனார் காஜல். அதன் ஷூட்டிங் சில பிரச்சனைகள் காரணமாக, தாமதம் ஆனாலும் தற்போது ஒருவழியாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். இப்படத்தை வருகிற ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழில் இந்தியன் 2 படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார் காஜல் அகர்வால். அப்படத்தின் ரிசல்டை பொறுத்து தான் அவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும். தற்போதைக்கு அவர் கைவசம் தெலுங்கில் பாலகிருஷ்ணா படம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி காட்சியளிக்கிறார். அதைப்பார்த்த ரசிகர்கள் இது காஜல் அகர்வால் தானா என கேட்டு வருகின்றனர். ஒரு சிலரோ அவர் பிளாஷ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா என்றும் முகத்துக்காக ஏதேனும் சிகிச்சை எடுத்துக்கொண்டாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஹரியானாவில் ஆட்சியை இழக்கும் பாஜக அரசு..! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆளுநருக்கு கடிதம்..!