fbpx

அதிகாலை சாலையோரம் அழுது கொண்டிருந்த பெண்..! கணவர் கண்முன்னே..! 15 கிலோமீட்டர் தூரம்..! உ.பியில் கொடூரம்…!

உ.பி.யில் கணவனை அடித்துவிட்டு, மனைவியை கடத்திச் சென்ற மர்ம கும்பல் ஒன்று கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு பெண் அழுது கொண்டிருந்ததை கண்டு, அங்கு விரைந்தனர். அந்த பெண் தேம்பி, தேம்பி அழுததை தொடர்ந்து, அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள்  வெளிவந்தன.

கொத்தவூர் காவல் நிலையப் பகுதியை சேர்ந்த அந்த பெண், தனது கணவருடன் கந்தாய் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சென்றிருந்தனர். திருமண நிகழ்வை முடித்துக் கொண்டு தம்பதியினர், இரவு ஒரு மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பிரதாப்கர் பகுதியில் தம்பதியினர் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.

சல்ஹிபூரில் இருந்து கட்டாரி பகுதிக்கு காரில் மர்ம கும்பல் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, தம்பதியினரை கண்டு வழிமறித்த மர்ம கும்பல், திடிரென அந்த பெண்ணின் கணவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

பின்னர், அந்த பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்ற மர்ம நபர்கள், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் 15 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்று சாலையில் வீசி சென்றுள்ளது மர்ம கும்பல். மேலும், அந்த பெண் அணிந்திருந்த நகைகளை அந்த மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது.

இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வடமாநிலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் இது போன்ற செயல்களால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

இயக்குநர் தரணியை பார்க்க நோ சொன்ன விஜய்! கில்லி ரீ-ரிலீஸ்க்கு பிறகு ட்விஸ்ட்!

shyamala

Next Post

CSK அணிக்கு பின்னடைவு..!! முக்கிய வீரர் போட்டியில் இருந்து திடீர் விலகல்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Wed May 1 , 2024
ஐபிஎல் 2024இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை இன்று (மே 1) எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முக்கிய வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அட்டவணையில் 8-வது இடத்தில் உள்ளது. ஆனால், கடந்த போட்டியில் KKR-க்கு எதிராக 262 ரன்களை எளிதாகத் துரத்தியதன் மூலம் […]

You May Like