கள்ளச்சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம்… கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பம் தெருவுல நிக்கணுமா..? – சீமான்

seeman34455 1559882512

முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிட நியமனம் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியைக்கூடச் செய்ய மறுப்பது கண்டனத்திற்குரிட்யது.

கொரோனா பெருந்தொற்றுக் காலம் முதல் தற்போதைய டெங்கு தொற்றுக் காலம் வரை தம் உயிரைப் பொருட்படுத்தாது, மக்கள் உயிர் காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றி வருபவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் வர அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க கடின உழைப்பே முதன்மையான காரணம் என்றும் தமிழ்நாட்டின் 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை-எளிய தமிழக மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர்.

ஆனால், ஆடம்பரத் திட்டங்களுக்காகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கும் திமுக அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளைக் கூட இன்றுவரை நிறைவேற்றாமல் அலட்சியம் செய்வது கொடுங்கோன்மை என்றும் கொரோனோ பெருந்தொற்றுப் பணியின்போது உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிறிதும் மனச்சான்று இன்றி திமுக அரசு ஏற்கமறுப்பது அதைவிடவும் பெருங்கொடுமை.

கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர் பணியின் போது ஏற்பட்ட கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவரது குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பதுதான் சமூக நீதியா? என கேள்வி எழுப்பினார். எனவே, கொரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.

முறைப்படி வழங்க வேண்டிய உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், போதிய மருத்துவர் – செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அரசு மருத்துவர் பெருமக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும்” என்றும் தெரிவித்தார்.

Read more: இந்தியாவில் 163 பேருக்கு புதிய XFG வகை கோவிட் பாதிப்பு உறுதி.. இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானதா?

Next Post

“இது வெறும் ட்ரெய்லர் தான்மா”..!! இன்னும் 2 ஆண்டுகள் தான்..!! அமெரிக்காவை விட இந்திய சாலைகள் மாஸாக இருக்கும்..!!

Tue Jun 10 , 2025
இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு, அமெரிக்காவைப் போலவே இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் செலவினங்களை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு ஏற்கனவே மாறிவிட்டதாகவும், நீங்கள் இப்போது பார்ப்பது வெறும் ட்ரெய்லர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய […]
Nitin 2025

You May Like