பயணிகள் ரயில் கட்டணத்தை (Passenger Train fare) கணிசமாக குறைக்கப் போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 40 முதல் 50 சதவீதம் வரை ரயில் கட்டணம் குறைய உள்ளது என்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவிட் லாக் டவுனுக்கு பிறகு பயணிகள் மற்றும் மெமு ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டன. இதனால் ரயில் கட்டணங்கள் அதிகரித்தன. கோவிட் சமயங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவே இதனை அமல்படுத்தியதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. […]

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கி இருக்கிறது. பாஜக ஒரு பக்கம், அதிமுக மறுபக்கம் என இரண்டு கட்சிகளும் தங்களது தலைமையில் கூட்டணியை அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில் இல்லாத மாநிலக் கட்சிகளுடன், பாஜக மற்றும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது . முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக கட்சியில் […]

நிதி கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால், கேரளாவில்(KERALA) ஒரு நபர், பூட்டிய வீட்டிற்குள் இல்லத்தரசியின் மீது பெட்ரோலை(PETROL) ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அஞ்சல் பகுதியில், சிபிமோல் (37) தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். அவரது […]

ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் பலோடி மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியும் இன்ஸ்டாகிராம் இன்ஃபளுயன்சருமான அனாமிகா பிஷ்னோயை குடும்ப தகராறில் சுட்டுக் கொன்றார். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பவர் அனாமிகா பிஷ்னோய். இவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் தனது கடையில் இருந்த போது கணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பகல் பொழுதில் நடைபெற்ற இந்த […]

கர்நாடகாவில்(KARNATAKA) குரங்கு காய்ச்சலால் 57 வயது பெண் ஒருவர் பலியானார். அம்மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக உயர்ந்துள்ளது. குரங்குகளில் இருக்கும் உண்ணிகள் கடிப்பதால் இந்த நோய் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நோய் பார்க்க கூடிய அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக […]

மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை(Mamta Banerjee) பற்றி பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கூறிய கருத்துக்கள் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவை தலைவர் மம்தா பானர்ஜியை ஆன்ட்டி என்று அழையுங்கள் என தெரிவித்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜியை(Mamta […]

திருச்சி(TRICHY) விஸ்வாஸ் நகரில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் குடோன்களில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. 50 தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், அந்தப் பகுதியில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:30 மணியளவில், திருச்சியில் உள்ள விஸ்வாஸ் நகரில், பழைய […]

இண்டிகோ விமானத்தில் சென்ற ஊடகவியலாளர் ஒருவர், அதன் உணவு பகுதியில் கரப்பான் பூச்சிகள் இருப்பதை வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார். பலரும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சுகாதாரத் தரங்கள் குறித்து கண்டனம் எழுப்பிய நிலையில், விமான நிறுவனம் தனது தவறை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டுள்ளது. தருண் சுக்லா என்ற ஊடகவியலாளர், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதன் உணவு பகுதியில் கரப்பான் பூச்சிகள் […]

மத்திய பிரதேசத்தில், நோய்வாய்ப்பட்ட தனது நண்பனுக்காக, பத்தாம் வகுப்பு பொது தேர்வை எழுதிய 19 வயது சிறுவன் பிடிபட்டார். நான்கு பரீட்சைகளை முடித்தபின், ஐந்தாவது பரிட்சையை எழுதும் போது அவர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது தேர்வுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரில் இருக்கும் சிபிஎஸ் கான்வென்ட் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுக் […]

அண்டார்டிகாவின் பிரதான நிலப்பரப்பில், அதிகம் பரவக்கூடிய ஏவியன் இன்ஃப்ளூயன்சா வைரஸ் (HPAIV) இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்க கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அண்டார்டிகாவின் பிரதான நிலப்பரப்பில், ஏவியன் இன்ஃப்ளுவென்சா வைரஸ் (HPAIV) எனப்படும் அதிக அளவில் பரவக்கூடிய நோய்க்கிருமி இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பறவைகளிடையே கடுமையான நோயை ஏற்படுத்தக் கூடியது என்றும் […]