தனது மனைவி ஜ்வாலா கட்டாவுக்கு, ஆமிர் கான் உதவி செய்யாவிட்டால் தனக்கு குழந்தையே கிடைத்திருக்காது என்று விஷ்ணு விஷால் உருக்கமான பேசியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால்-ஜூவாலா கட்டா தம்பதியின் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் இதில் ஹிந்தி நடிகர் அமீர்கான் கலந்துகொண்டு இவர்களது குழந்தைக்கு மீரா என்று பெயர் சூட்டினார். இது பெருமளவில் பேசுப்பொருளானது. ஏனென்றால், விஷ்ணு விஷாலும், அமீர்கானும் எப்படி பழக்கம். இருவரும் ஒன்றாக கூட நடித்தது இல்லையே என்று விசாரித்தால், தனது அம்மா ட்ரீட்மென்ட்டுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தங்கியிருந்தார் அமீர்கான். அப்போது 2023ல் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட, அமீர்கான் தங்கியிருந்த சென்னை பழைய மகாபலிபுரம் வீடு பாதிக்கப்பட்டது.
அப்போது அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற விஷ்ணு விஷால் உதவி இருக்கிறார். அதிலிருந்து இரண்டு பேரும் நட்பாகி இருக்கிறார்கள். அந்த பழக்கத்தில் மனைவி, குழந்தை பேறு பிரச்னைகள் பற்றி அமீர்கானிடம் விஷ்ணு விஷால் விவரித்து இருக்கிறார். அதை கேட்டவர், மும்பைக்கு அவர்களை அழைத்து ஒரு நல்ல மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுக்க சொல்லியிருக்கிறார்.
அந்த சமயத்தில் 10 மாதம் விஷ்ணு விஷால் மனைவியை மும்பையில் உள்ள அமீர்கான் அம்மா, சகோதரி கவனித்து இருக்கிறார்கள். அந்த பாசம், பிணைப்பில் குழந்தை பிறந்தவுடன் நீங்கதான் பெயர் வைக்கவேண்டும் என்று விஷ்ணு விஷால்-, ஜூவாலா தம்பதியர் கேட்டுகொண்டுள்ளனர். அதை ஏற்றுக்கொண்டு அவரும் பெயர் சூட்டியுள்ளார்.
சமீபத்தில் கலாட்டா பிளஸ் உடனான ஒரு உரையாடலில், விஷ்ணு விஷால் இருவருக்குமிடையேயான ஆழமான மற்றும் உணர்ச்சிபூர்வமான தொடர்பையும், பெற்றோராக மாறுவதில் அவர் வகித்த முக்கிய பங்கு குறித்து பகிர்ந்துகொண்டார். “மனைவி ஜ்வாலாவும் நானும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒரு குழந்தையைப் பெற முயற்சி செய்து கொண்டிருந்தோம்,” அவளுக்கு 41 வயது என்பதால், அது நடக்கவில்லை, அதனால் நாங்கள் நிறைய IVF சிகிச்சைகளை எடுக்க வேண்டியிருந்தது. 5-6 சுழற்சிகள் தோல்வியடைந்தது இதனால் மனமுடைந்த, ஜ்வாலா ஐவிஎப் செயல்முறையை கைவிட்டார்.
அதே நேரத்தில், ஹைதராபாத்தில் அமீர் கானை சந்தித்து தனக்கு ஏற்பட்ட துயரத்தை அவரிடம் கூறினேன். அப்போது அமீர்கான், எல்லாவற்றையும் நிறுத்துங்கள், மும்பைக்கு வாருங்கள்’ என்றார். இதையடுத்து எங்களை அங்குள்ள ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார், கிட்டத்தட்ட 10 மாதங்கள், ஜ்வாலா அவரது வீட்டில் தங்கவைத்து பார்த்துக்கொண்டனர். நான் ஒவ்வொரு முறையும் பயணம் செய்யும்போது, அவர் எங்களை குடும்பம் போல நடத்தினார்.”
அவர் நமக்கு என்ன செய்தார்னு எனக்குச் சொல்லத் தெரியாது. அது ஒரு வரம். கடைசியில, ரெண்டு IVF சுழற்சிகளுக்குப் பிறகு, ஜூவாலா கர்ப்பமானார். அப்போதான் நான் அவங்ககிட்ட, ‘சார், நீங்கதான் குழந்தைக்குப் பெயர் வைக்கப் போறீங்க’ன்னு சொன்னேன். அவர் இல்லை என்றால் எங்களுக்கு குழந்தையே கிடைத்திருக்காது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Readmore: Tn Govt: படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வரை உதவித்தொகை…!