essential drugs: வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதன் நுகர்வுக்கு ஏற்ப உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் பாராசிட்டமால், மார்பின், அட்ரினலின், சிட்ரிசின், பாம்பு விஷத்திற்கு எதிரான ஆன்டிசீரம், சல்புடமைன், சாலிசிலிக் அமிலம், ரேபிஸ் தடுப்பூசி, பிசிஜி, […]

Aavin: தவிர்க்க முடியாத சில காரணங்களால் சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையாறு பகுதிகளில் பால் விநியோகம் ஒருசில மணி நேரம் தாமதமாக விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இருப்பினும் சீரான […]

ED: சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனைகளில் வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின்கீழ் கபிரிகார்னியன் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் விஜய் குமார் சுக்லா மற்றும் சஞ்சய் கோஸ்வாமி, லட்சுமிடன் மரைடைம், இந்துஸ்தான் இன்டர்நேஷனல், எம். ராஜ்நந்தினி மெட்டல்ஸ் லிமிடெட், ஸ்டாவர்ட் அலாய்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாக்யநகர் லிமிடெட், விநாயக் ஸ்டீல்ஸ் லிமிடெட், வசிஷ்டா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் […]

PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின்கீழ் இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 […]

YouTube: சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவில் 2.25 மில்லியன் வீடியோக்களை நீக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ நிறுவனமான யூடியூப்பை இந்தியாவில் 46.2 கோடி பேர் பயன்படுத்திவருகின்றனர். அந்தவகையில், கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வெளியான வீடியோக்களை நீக்கியுள்ள யூடியூப் நிறுவனம் உலகளவில் இதே காலத்தில் வெளியான 90 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளது […]

Annamalai: கோவை மக்களை விலைக்கு வாங்க, தி.மு.க.,வின் டி.ஆர்.பி., ராஜா பணத்தோடு நிற்கிறார்; இதை முறியடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பா.ஜ., கூட்டணி சட்டசபை தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில பேசிய கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை, இந்திய அரசியல் வரலாற்றில், இது முக்கியமான தேர்தல். இந்தியா முன்னேறக்கூடாது என்று நினைப்பவர்கள் ஓரணியில் […]

Dhoni: நேற்றைய குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அந்த அணியின் நட்சத்திர வீரர் விஜய் சங்கரின் விக்கெட்டை தனது சிக்னேச்சர் விக்கெட் கீப்பிங் கேட்ச் மூலம் தோனி எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை […]

TNEB: ஐ.பி.எல்., கிரிக்கெட்டால் மட்டும், மின் தேவை வழக்கத்தை விட கூடுதலாக, 100 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது என்று மின் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழக மின்தேவை தினமும் பகலில், 15,000 மெகா வாட்டாகவும்; காலை, மாலையில், 16,000 மெகா வாட்டாகவும் உள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாடு, கோடை வெயிலால், ‘ஏசி’ சாதன பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மின் தேவை […]

பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டு வைத்த குற்றவாளிகள், சென்னை திருவல்லிக்கேணியில் தங்கி இருந்தது தொடர்பாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள், தனியார் தங்கும் விடுதிகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். பெங்களூரில், ராமேஸ்வரம் கபே என்ற ஹோட்டலில், மார்ச் 1ம் தேதி குண்டு வெடித்தது. இதில், ஓட்டல் ஊழியர்கள் உட்பட, 10 பேர் படுகாயமடைந்தனர். என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குண்டு வெடிப்பை நடத்தியது, கர்நாடக மாநிலம் […]

Modi: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. மக்களவை தேர்தலையொட்டி, தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மக்களவை தொகுதியில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டும் என பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனை தீவிரப்படுத்தும் வகையில், […]