5நாட்களில் 98பேர் மாரடைப்பால் மரணம்..! நடைப்பயிற்சி செல்ல வேண்டாம் -நிபுணர்கள்

குளிர் காலத்தில் நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டுமென இருதயநோய் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் குளிர்காலத்தில் டீன் ஏஜ் வயதினருக்கும் மாரடைப்பு வர வாய்ப்பு என அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர்.


எல்.பி.எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அளித்துள்ள புள்ளிவிவர அறிக்கையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 5 நாட்களில் மாரடைப்பு மற்றும் மூளைச்சாவு காரணமாக 98 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 98பேரில் , 44 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர், 54 நோயாளிகள் சிகிச்சைக்கு முன்பே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகரிக்கும்: கான்பூரில் உள்ள லக்ஷ்மிபத் சிங்கானியா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி மற்றும் கார்டியாக் சர்ஜரி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஒரு வாரத்தில் 723 இதய நோயாளிகள் மருத்துவமனையின் அவசர மற்றும் வெளிநோயாளர் பிரிவுக்கு வந்துள்ளதாகவும்,. கடுமையான குளிரால் பாதிக்கப்பட்ட 14 நோயாளிகள், கடந்த சனிக்கிழமையன்று மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஆறு பேர் இதய நோய் மையத்தில் சிகிச்சையின் போது இறந்ததாகவும், வேலை செய்யும் நிறுவனத்தில் 8 பேர் இறந்தனர் எனவும் தெரிவித்துள்ளது. கோவிட்-19க்குப் பிறகு இந்தியாவில் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் மாரடைப்புகள் மருத்துவர்களை கவலை அடையச் செய்துள்ளது.

குளிர்காலத்தில் நடைப்பயிற்சியைத் தவிர்க்கலாம்: லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசியர் ஒருவர் கூறுகையில், “இந்த குளிர் காலத்தில் மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு மட்டும் வராது. டீன் ஏஜ் வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்படும் என அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். சூரிய உதயத்திற்கு முன் குளிர்காலத்தில் வெளிப்புற காலை நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டுமென இருதயநோய் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் இந்த காலநிலையில் குளிரில் இருந்து நோயாளிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

KOKILA

Next Post

மாம்பழம் உடல் எடையை அதிகரிக்குமா..? உட்கொள்வது நல்லதா..? கெட்டதா..?

Tue Jan 10 , 2023
மாம்பழ சீசன் வரும்போது, ​​நிறைய சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்பதால், அதிகமாகச் சாப்பிடாமல் கவனமாக இருங்கள். மாம்பழங்கள் ஒரு நல்ல சிற்றுண்டியாகும். ஏனெனில் அவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது.  இது உங்களை உற்சாகமாகவும் வேலை செய்யத் தயாராகவும் உணர உதவுகிறது. மாம்பழங்கள் உடற்பயிற்சிக்கு முன் ஒரு நல்ல உணவாகும், ஏனெனில் அவை உங்கள் நாளைத் தொடங்கத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. மாம்பழங்கள் பாலிபினால்களின் […]
9 Proven Health Benefits Of Eating Mangoes In Pregnancy 2005170615 2005170634

You May Like