பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்கள் வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) வெளியிட்டு இருக்கும் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வங்கி பணியாளா் தோ்வாணையம் (ஐபிபிஎஸ்) மூலம் பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா என நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் 2026 – 27 ஆம் ஆண்டிற்கான ஐடி அலுவலர், வேளாண் கள அலுவலர், ராஜ்பாஷா அலுவலர், சட்ட அலுவலர், மனிதவளம்,பணியாளர் அலுவலர், சந்தைப்படுத்தல் அலுவலர் என 1,007 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.48,480 – 85,920 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 21.7.2025 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு சலுகைகள் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibps.in/ அல்லது https://ibpsreg.ibps.in/crpspxvjun25/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
Read more: BREAKING| பள்ளி வளாகத்தில் போர் விமானம் விழுந்து விபத்து.. ஒருவர் பலி..!! மாணவர்களின் நிலை என்ன..?