ஆதார் அட்டைக்காக விண்ணப்பிப்பதோ, தகவல்களில் திருத்தங்களைச் செய்வதோ, புதிய கார்டு பெறுவதோ போன்ற சேவைகளுக்காக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆதார் சேவை மையங்கள் (Aadhaar Seva Kendras) செயல்பட்டு வருகின்றன.
இந்த சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணியிடங்களை மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழியாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், மொத்தம் 203 ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணியிட விவரம்: பல்வேறு மாநிலங்களில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் 5 காலிப்பணியிடங்கள் உள்ளன. சென்னை, கரூர், நாகப்பட்டினம், நீலகிரி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆதார் சேவை மையங்கள் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு 1 வருட காலத்திற்கு ஒப்பந்த முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
* இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டாயம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் 2 வருடங்கள் ஐடிஐ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
* அல்லது 10-ம் வகுப்பிற்கு பின்பு 3 வருட டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பதார்கள் ஆதார ஏஜென்சி மூலம் பெற்ற சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், அடிப்படை கணினி திறன் அவசியம்.
சம்பள விவரம்: ஆதார் சூப்பர்வைசர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அவர்களின் திறன், கல்வித்தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://csc.gov.in/ask என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பம் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.08.2025
Read more: வயிறு வலியில் துடித்த சிறுவன்.. ரத்தம் சொட்ட சொட்ட அடித்த அரசு பள்ளி ஆசிரியர்..!! கடலூரில் பரபரப்பு