11 மணி நேர சோதனை.. அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சிக்கியது என்ன? ED அதிகாரப்பூர்வ தகவல்..

Minister I Periyasamy ED Raid

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. நேற்று முன் தினம் அமைச்சர், ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது. மேலும் ஐ.பெரியசாமியின் மகன், மகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும், எம்எல்ஏ குடியிருப்பில் அவரது மகனின் அறை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 11 மணி நேரம் வரை நீடித்தது.


அமலாக்கத்துறையினரின் இந்த சோதனை சுமார் 11 மணி நேரம் நீடித்தது.. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. சோதனையின் முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி கைகுலுக்கி சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தார். இதுதொடர்பான போட்டோ இணையத்தில் வைரலானது..

வழக்கின் பின்னணி என்ன?

கடந்த 2006 – 2011ஆம் ஆண்டு வரை வீட்டுவசதித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது, ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீட்டுமனைக்காக ஒதுக்கிய இடத்தில் வணிக வளாகம் கட்டியதாக புகார் எழுந்தது. இதற்கு ஜாபர் சேட்டின் மனைவிக்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது..

இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “ பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி தொகுதி எம்.எல்.ஏ., அவரது மகன் ஐ.பி. செந்தில் குமார் மற்றும் பிறருடன் தொடர்புடைய, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மற்றும் சென்னையில் உள்ள பல இடங்களில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக, 2002 ஆம் ஆண்டு பண மோசடி சட்டத்தின் கீழ், சென்னை ED துறை 16/08/2025 அன்று சோதனை . சோதனைகளின் போது, சொத்துக்கள்/முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.” என்று தெரிவித்துள்ளது.

Read More : போடு வெடிய.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஜய்க்கு கிடைத்த வெற்றி.. குஷியில் தொண்டர்கள்..!!

RUPA

Next Post

ஏர்டெல்-ஐ தொடர்ந்து ஜியோவும் முடங்கியது.. Call போகல.. நெட் யூஸ் பண்ண முடியல.. பயனர்கள் அவதி.. குவியும் புகார்கள்..!

Mon Aug 18 , 2025
இந்தியா முழுவதும் ஜியோ பயனர்கள் நெட்வொர்க் பிரச்சனைகளைப் புகாரளித்து வருகின்றன.. அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தவோ முடியவில்லை என்றும் பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.. செயலிழப்பு கண்காணிப்பு தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, புதன்கிழமை ஏராளமான ஜியோ பயனர்கள் தங்கள் சேவைகளில் சிக்கல்களைப் புகாரளித்தனர், இது நாடு முழுவதிலுமிருந்து புகார்கள் அதிகரித்தன. பெரும்பாலான ஜியோ பயனர்கள் மொபைல் இணையத்தில் (54 சதவீதம்) சிக்கல்களைப் புகாரளித்ததாக டவுன்டெக்டர் தளம் […]
airtel jio down

You May Like