சீனாவின் தெற்கு யுன்னான் மாகாணத்தில் இன்று நிகழ்ந்த ஒரு ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குன்மிங் ரயில் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. குன்மிங் நகரிலுள்ள லுயோயாங் டவுன் ரயில் நிலையத்தின் வளைவு பகுதியில், நிலநடுக்கத்தை கண்டறியும் சோதனைகள் நடத்தி வந்த ரயில், பாதையில் இருந்த தொழிலாளர்கள் மீது மோதிய போது இந்த விபத்து நடந்தது..
சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங் அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ தொழிலாளர்களின் குழு மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.. 2 பேர் காயமடைந்தும் உள்ளனர். இது கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ரயில் விபத்தாகும்.” என்று தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தை கண்டறியும் உபகரணங்களை சோதித்துக் கொண்டிருந்த ரயில், யுன்னான் மாகாணத்திலுள்ள லுயோயாங் டவுன் ரயில் நிலையத்தில் உள்ள வளைவு பகுதியில் இருந்த தொழிலாளர்கள் மீது மோதியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்..
ரயில் நிலையம் மீண்டும் வழக்கமான சேவைகளைத் தொடங்கியுள்ளதாகவும், விபத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ரயில்வே நெட்வொர்க் உலகிலேயே மிகப்பெரியது; இது 1,60,000 கிலோமீட்டருக்கும் (1,00,000 மைல்) மேலாகப் பரந்து விரிந்து உள்ளது, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பயணங்களை மேற்கொள்ளுகிறது. இந்த அமைப்பு அதின் வேகத்திற்கும் செயல்திறனைக்கும் பாராட்டப்படுவதுடன், சில பெரிய விபத்துகள் காரணமாக விமர்சனத்தையும் சந்தித்துள்ளது.
உதாரணமாக, 2011-ல் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் மோதி விபத்தில் 40 பேர் உயிரிழந்ததோடு 200 பேர் காயமடைந்தனர். 2021 ஆம் ஆண்டு வடமேற்கு கான்சு மாகாணத்தில், லன்சோ-ஷின்ஜியாங் ரயில் பாதையில் பணிபுரிந்த தொழிலாளர்களை மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : ஹாங்காங் தீ விபத்து.. பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு.. 300 பேர் மாயம்; கொலைக் குற்றச்சாட்டில் மூவர் கைது!



