எல்லைப் பாதுகாப்பு படையில் 1,121 காலிப்பணியிடங்கள்.. ரூ.81,700 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..

job 1 1

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படை (BSF), 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. அதன்படி எல்லை பாதுகப்பு படையின் கம்யூனிகேஷன் பிரிவில் ரேடியோ அப்ரேட்டர் மற்றும் ரேடியோ மெக்கானிக் ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


பணியிடவிவரம்:

தலைமை கான்ஸ்டபிள் (ரேடியோ அப்ரேட்டர்) – 910 காலிப்பணியிடங்கள்
தலைமை கான்ஸ்டபிள் (ரேடியோ மெக்கானிக்) – 211 காலிப்பணியிடங்கள்

வயது வரம்பு: தலைமை கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க 18 வயதை நிரப்பி இருக்க வேண்டும். மேலும், அதிகபடியாக பொதுப் பிரிவினர் 25 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 28 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயது வரையும் இருக்கலாம். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஏற்கனவே அரசு பணியில் இருக்கும் நபர்களுக்கு தளர்வு உள்ளது.

ரேடியோ அப்ரேட்டர் (Radio Operator) – தகுதி

12-ம் வகுப்பு (Physics, Chemistry, Maths) – 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி + பின்வரும் எந்த ஒரு பிரிவில் ITI சான்றிதழ்.

  • Radio & TV
  • Electrical Engineering
  • Computer Operator & Programming Assistant (COPA)
  • Data Preparation & Computer Software
  • General Electronics Engineering
  • Data Entry Operator

ரேடியோ மெக்கானிக் (Radio Mechanic) – தகுதி

12-ம் வகுப்பு (Science subjects) – 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது பின்வரும் எந்த ஒரு பிரிவில் ITI சான்றிதழ்

  • Radio & TV
  • General Electronics
  • Computer Operator & Programming Assistant (COPA)
  • Data Preparation & Computer Software
  • Electrician
  • Fitter
  • Information Technology
  • Electronics System Maintenance
  • Communication Equipment Maintenance
  • Network Technician
  • Computer Hardware
  • Mechatronics
  • Data Entry Operator

சம்பள விவரம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 4 கீழ் மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு நடைமுறை:

* விண்ணப்பித்த அனைவரும் முதலில் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டும்.

* உடற்தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு நடத்தப்படும்.

* ஆவணங்கள் (Certificates) சரிபார்க்கப்படும்.

* மருத்துவ பரிசோதனை (Medical Test) மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் பெற்றுள்ளவர்கள் https://rectt.bsf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு விலக்கு இருப்பினும் ரூ.50 சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: செப்டம்பர் 23 வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: 2.5 பில்லியன் அக்கவுண்ட்..!! மொத்த டேட்டாவும் போச்சு..!! கதறும் பயனர்கள்..!! கூகுள் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை..!!

English Summary

1,121 vacancies in Border Security Force.. Salary up to Rs.81,700..!!

Next Post

கோயிலுக்கு பக்கத்துல இப்படி ஒரு கேவலமான செயலா..? பொது இடத்தில் வைத்தே விபச்சார தொழில்..!! திருப்பூரில் ஷாக்கிங் சம்பவம்..!!

Sun Aug 31 , 2025
தொழிற்துறையின் மையமாகத் திகழும் திருப்பூர், பனியன் மற்றும் துணி ஏற்றுமதியின் காரணமாக நாடு முழுவதும் அறியப்படும் நகரமாக வளர்ந்துள்ளது. சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியமர்ந்துள்ள இந்த நகரத்தில், வெளிமாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் இங்கு வேலைக்காக குடிபெயர்ந்து வருகின்றனர். இந்த சூழலில் தான், கலைஞர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதச் செயல்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சில பெண்கள் […]
Thirupur Crime 2025

You May Like