உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்12-3-30 நடைப்பயிற்சி விதி… நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!!

walk 2

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்குவது பலருக்கும் கடினமான காரியமாகிவிட்டது. இதன் விளைவாக, உடல் பருமன் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், இதற்கு ஒரு எளிய தீர்வாக “12-3-30 நடைபயிற்சி” முறை பெரும் வரவேற்பைப் பெறுகிறது.


12-3-30 உடற்பயிற்சி என்றால் என்ன? இந்த முறைப்படி, ஒருவர் டிரெட்மில்லில் 12% சாய்வில், மணிக்கு 3 மைல் வேகத்தில், 30 நிமிடங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும். இதையே “12-3-30” என அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறை 2019ஆம் ஆண்டு சமூக ஊடக செல்வாக்காளர் லாரன் ஜிரால்டோ (Lauren Giraldo) அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. எடை குறைப்பு முயற்சியில் இருந்த பலருக்கும் இது சிறந்த விளைவுகளை அளித்ததால், தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.

டிரெட்மில் இல்லாதவர்களும் வீட்டில் இதே பயிற்சியை செய்யலாம். சரிவான பாதையில் வேகமாக நடப்பது.படிக்கட்டுகள் ஏறி இறங்குவது. அல்லது சிறிய மலைப்பகுதிகளில் நடைபயிற்சி செய்வது.இவை அனைத்தும் டிரெட்மில் பயிற்சிக்கு இணையான விளைவுகளை தரும்.

12-3-30 நடைபயிற்சியின் நன்மைகள்:

எடை குறைவு: சாய்வில் நடப்பதால் அதிக கலோரிகள் எரிகின்றன.

இதய ஆரோக்கியம்: இரத்த ஓட்டம் மேம்பட்டு இதய துடிப்பு சீராகிறது.

கால்கள் தசை பலம்: தொடைகள், முழங்கால், கால்கள் பலப்படுகின்றன.

மனநிலை சமநிலை: மனஅழுத்தம் குறைந்து, நிம்மதி மற்றும் உற்சாகம் அதிகரிக்கிறது.

மூட்டு நெகிழ்வு: உடல் சுறுசுறுப்பாகவும், தசைகள் தளர்ச்சியில்லாமல் இருக்கும்.

எப்போது, எத்தனை நாட்கள் செய்யலாம்? வாரத்தில் 5 நாட்கள் இந்த பயிற்சியைச் செய்தால் சிறந்த விளைவுகள் கிடைக்கும். தொடக்கநிலை பயிற்சியாளர்கள் முதலில் 10-15 நிமிடங்கள் தொடங்கி, மெதுவாக 30 நிமிடங்கள் வரை அதிகரிக்கலாம்.

Read more: திருட வந்த இடத்தில் சில்மிஷம்..!! தூக்கத்தில் இருந்த பெண்ணின் நைட்டியை கிழித்து பாலியல் அத்துமீறல்..!! குமரியில் ஷாக்கிங் சம்பவம்..!!

English Summary

12-3-30 Walking Exercise Rule That Will Help You Lose Weight Fast… Try It Yourself..!!

Next Post

காமெடி நடிகரின் காம வெறி..!! சினிமா பிரபலங்களுக்கு 9ஆம் வகுப்பு மாணவியை விருந்தாக்கிய கொடூரம்..!! சென்னையை உலுக்கிய சம்பவம்..!!

Tue Oct 7 , 2025
சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. அந்த விடுதி அறையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கே.கே.நகரைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை போலீசார் மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி, கார்த்திக் […]
Child 2025

You May Like