அதிக எடை கொண்டவர்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறார்கள். அதற்கு, நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக எடை குறைக்க முயற்சிப்பவர்கள், 12-3-30 உடற்பயிற்சி செய்தால், அது விரைவாக எடை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், வேறு பல நன்மைகளையும் தரும்.
வாக்கிங் என்பது மிகவும் எளிமையான அதே நேரத்தில் அதிக செயல்திறன் கொண்ட ஒரு உடற்பயிற்சியாகும். ஆனால் தினமும் கொஞ்ச நேரம் நடப்பது என்பதே கடினமாகி விட்டது. வாழ்க்கை முறையின் அனைத்து அங்கமும் சொகுசு முறையாகிவிட்டது. நகர்ப்புறங்களில் மக்களுக்கு தங்களுக்காகலும், தங்களது உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும் நேரம் என்பதே கிடைப்பதில்லை. உடல் பருமன் பிரச்சனை என்பது வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது.
இவை அனைத்திற்கும் சிறந்த தீர்வாக இருப்பது நடை பயிற்சிதான். காலையிலும் மாலையிலும் நடந்தால், பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நடப்பதால் ஒட்டு மொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முறையான நடைபயிற்சி எப்படி செய்வது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதற்கு 12-3-30 நடைபயிற்சி என்பது பெரிதும் உதவியாக இருக்கும். அது என்ன 12-3-30 உடற்பயிற்சி என்ற சந்தேகம் வருகிறதா..?
12-3-30 உடற்பயிற்சி என்றால் என்ன? 12-3-30 உடற்பயிற்சி என்பது மணிக்கு 3 மைல் வேகத்தில் 30 நிமிடங்கள் 12% சாய்வில் டிரெட்மில்லில் நடப்பதை உள்ளடக்குகிறது. இது 12-3-30 நடைபயிற்சி முறை என்று அழைக்கப்படுகிறது. இந்த பயிற்சி 2019 ஆம் ஆண்டு சமூக ஊடக செல்வாக்கு மிக்க லாரன் ஜிரால்டோவால் உருவாக்கப்பட்டது. நடைப்பயிற்சியின் போது இந்த விதியை பின்பற்றுவது அதன் மூலமாக கிடைக்கும் பலன்களை பன்மடங்காக அதிகரிக்கும்.
டிரெட்மில் இல்லாதவர்கள் சரிவில் வேகமாக நடக்க முடியும். தட்டையான மலைக்குப் பதிலாக செங்குத்தான மலையில் ஏறி இறங்கலாம். படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலமும் நல்ல பலன்களைப் பெறலாம். பக்கவாட்டில் நடப்பது கால்கள் மற்றும் கீழ் உடல் தசைகளை பலப்படுத்துகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இரத்த ஓட்டம் மேம்படுகிறது. எடை இழப்புடன், இது மனநிலையையும் மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
Read more: BREAKING| ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை.. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி..!!