மாநிலத்தில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில், நடைபெற உள்ளது. எனினும் தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தல் தேதிகளை வெளியிடவில்லை.. தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு வருகிறார்.. உள்ள அனைத்து நுகர்வோருக்கும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்..
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “நாங்கள் தொடக்கத்திலிருந்தே மலிவான விலையில் மின்சாரம் வழங்கி வருகிறோம். ஆகஸ்ட் 1, 2025 முதல், அதாவது மாநிலத்தின் அனைத்து வீட்டு நுகர்வோரும் 125 யூனிட் வரை மின்சாரத்திற்கு எந்தப் பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்று நாங்கள் இப்போது முடிவு செய்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்..
முதலமைச்சரின் கூற்றுப்படி, இந்த அறிவிப்பு மாநிலத்தில் மொத்தம் 1 கோடியே 67 லட்சம் குடும்பங்களுக்கு பயனளிக்கும். வீட்டு நுகர்வோரின் ஒப்புதலுடன் வீட்டு கூரைகள் அல்லது அருகிலுள்ள பொது இடங்களில் சோலார் பேனல்களை நிறுவ மாநில அரசு எடுத்த முடிவு குறித்தும் அவர் தெரிவித்தார். இந்த முடிவு அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்..
குதிர் ஜோதி திட்டத்தின் கீழ், மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்கும், மீதமுள்ளவர்களுக்கு உரிய ஆதரவை வழங்கும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், குடியிருப்பாளர்களின் அனுமதியைப் பெற்ற பிறகு, கூடுதல் நன்மைகளை வழங்குவதற்காக, அவர்களின் கூரைகளில் சூரிய மின் பேனல்கள் நிறுவப்படும் என்றும் பீகார் முதல்வர் உறுதியளித்தார். மாநிலத்தில் உள்ள அரசுப் பணிகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்…
“அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், இந்த வீட்டு நுகர்வோரிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, கூடுதல் நன்மைகளை வழங்குவதற்காக, அவர்களின் கூரைகளில் அல்லது அருகிலுள்ள பொது இடங்களில் சூரிய மின் நிலையங்கள் நிறுவப்படும் என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்,” என்று அவர் பதிவில் மேலும் கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம், அரசு வேலைகளில் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக முதலமைச்சர் அறிவித்த முடிவுகள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ள ஆளும் என்.டி.ஏ அரசாங்கத்தால் ஒரு மூலோபாய நடவடிக்கையாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு!. மும்பையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!. பயணிகள் பீதி!