கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், பள்ளி முடிந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை கரும்புத் தோட்டத்துக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டம், முர்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்த சிறுமி, கடந்த நவம்பர் 21-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்குத் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மணிகாந்த் தின்னிமணி மற்றும் ஈரண்ணா சங்கம்மன்னவர் ஆகிய இரண்டு இளைஞர்கள், அந்தச் சிறுமியைப் பின்தொடர்ந்துள்ளனர்.
அவர்கள் சிறுமியை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று, அருகிலிருந்த கரும்புத் தோட்டத்துக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த துயரம் குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தாமதமாக செயல்பட்ட பெற்றோர், பின்னர் முர்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், தீவிரமாக வலைவீசித் தேடினர். இறுதியாக, மணிகாந்த் மற்றும் ஈரண்ணா சங்கம்மன்னவர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களையும் காவலில் எடுத்துப் போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : “இனி வீட்டிலிருந்தபடி 10 நிமிடங்களில் பத்திரப்பதிவு செய்யலாம்”..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!



