தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், மாநில சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 1429 சுகாதார ஆய்வாளர் கிரேடு-II (Health Inspector Grade-II) பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
பணியின் பெயர்: சுகாதார ஆய்வாளர் கிரேடு-II
மொத்த காலியிடங்கள்: 1,429
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
சம்பளம்: இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு :
* 12-ஆம் வகுப்பு (HSC) தேர்வில் உயிரியல் (Biology) அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப் பிரிவுகளைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* மேலும், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பன்நோக்கு சுகாதாரப் பணியாளர் (MPHW) (ஆண்) / சுகாதார ஆய்வாளர் (HI) / சுகாதாரத் துறை ஆய்வாளர் (SI) பாடப் பிரிவின் சான்றிதழையும் பெற்றிருப்பது கட்டாயம்.
* விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம் :
* தமிழ் மொழித் தகுதித் தேர்வு (10-ஆம் வகுப்பு தரத்தில் – இது தகுதித் தேர்வாகும்).
* கணினி வழித் தேர்வு (CBT) – சுகாதார ஆய்வாளர் கிரேடு-II பணிக்கான கொள்குறி வகை (Objective Type) தேர்வு.
விண்ணப்பக் கட்டணம் :
SC / SCA / ST / DAP பிரிவினருக்கு: ரூ.300/-
மற்ற பிரிவினருக்கு: ரூ.600/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://mrb.tn.gov.in/ மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 16, 2025 ஆகும்.
Read More : இன்று வரை மர்மம் விலகாத கோயில்..!! லிங்க கருவறையில் தலைகீழாக தெரியும் நிழல்..!! எங்கு இருக்கு தெரியுமா..?



