உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று ரஷ்யா தாக்குதல் நடத்தியது.. இதில் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.. சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர். இது கீவ் நகரில் நடந்த மிகக் கொடிய ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலையில் கீவ் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள், நகரம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கீவ் நகரின் கிழக்கில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் கடுமையாக சேதமடைந்தது.. அங்கு மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து 3 பேரை உயிருடன் மீட்டனர்.
இறந்தவர்களில் 2 வயது குழந்தை, 14 வயது சிறுமி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் அடங்குவர். இதில் சுமார் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும், மீட்பு முயற்சிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.. உள்துறை அமைச்சர் இஹோர் கிளைமென்கோ, இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தினார்.
கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ, இந்த தாக்குதலை தலைநகரின் மீதான பெரும் தாக்குதல் என்று குறிப்பிட்டார்.. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களில் இருக்குமாறு வலியுறுத்தினார். இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள், ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்,இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. மேலும் “ ரஷ்யா உக்ரைனை பயமுறுத்துவதற்கு எதையும் நிறுத்தாது, பொதுமக்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கண்மூடித்தனமாகக் கொன்றது, மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கூட குறிவைக்கும் என்பதை இது காட்டுகிறது,” என்று கூறினார்.
மீண்டும் தாக்குதல்
ஆகஸ்ட் மாதத்தில் உக்ரைனில் அமைதி நிலவிய நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் ஏற்பட்டது.. இதற்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அலாஸ்காவில் விளாடிமிர் புடினை சந்தித்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான தோல்வியுற்ற முயற்சிக்குப் பிறகு குண்டுவீச்சு நடந்தது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை கண்டித்தார், இராஜதந்திரம் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் மாஸ்கோவிற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைக் காட்டியதாகக் கூறினார். மேலும் “இன்று இந்த ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் தாக்குதல் ட்ரோன்கள், வாரக்கணக்கில் மற்றும் மாதங்களாக போர்நிறுத்தம் மற்றும் உண்மையான ராஜதந்திரத்திற்காக அழைப்பு விடுத்து வரும் உலகில் உள்ள அனைவருக்கும் ஒரு தெளிவான பதிலாகும். ரஷ்யா பேச்சுவார்த்தை மேசைக்கு பதிலாக பாலிஸ்டிக்ஸைத் தேர்வு செய்கிறது” என்று அவர் கூறினார்.
Read More : 15 பேர் பலி.. சட்டவிரோத கட்டடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்..!!