இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்கள் என்பது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், புதிய வாய்ப்புகளை அடையவும், சமூகத்தில் கருத்துக்களை பரப்புவதற்கும் சமூக வலைதளங்கள் பெரிதும் பயன்படுகின்றன. ஆனால், இந்த வசதிகளுடன் கூடிய தளங்களில், குறிப்பாக பெண்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். தனியுரிமை மீறல், ஆன்லைன் தொல்லைகள், ஃபேக் கணக்குகள், கருத்துகள், மிரட்டல்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த சொவ்வாய் பகுதியை சேர்ந்த சங்கீத் என்ற 20 வயது இளைஞர், சமூக வலைதளம் மூலம் 15 வயது சிறுமியுடன் பேசி பழகி வந்துள்ளார். நாளடைவில் தங்களது காதலை பரிமாறிக் கொண்ட இருவரும், செல்போனில் அடிக்கடி மணிக் கணக்கில் பேசி வந்துள்ளனர். மேலும், இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் தான், அந்த சிறுமியிடம் பல ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளார் சங்கீத். பின்னர், சிறுமியை கண்ணூர் பகுதியில் இருக்கும் விடுதி ஒன்றுக்கு சங்கீத் அழைத்துள்ளார். சிறுமியுடன் தனது காதலனை நம்பிச் சென்றுள்ளார். சிறுமி அங்கு வந்ததுமே ஏற்கனவே புக்கிங் செய்து வைத்திருந்த அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்றார்.
அப்போது திடீரென சங்கீத் தனது இரண்டு நண்பர்களான அபிஷேக் (20) மற்றும் ஆகாஷ் (20) ஆகிய இருவரையும் அந்த அறைக்கு வரவழைத்துள்ளான். பின்னர், அங்கு சிறுமிக்கு குளிப்பானம் கொடுத்துள்ளனர். இதை குடித்ததும் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். பின்னர், இதை சாதகமாக்கிக் கொண்ட மூவரும் அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், சிறுமி கண் விழித்து பார்த்ததும் தனக்கு நேர்ந்த அநீதி குறித்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். ஆனால், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். இப்பினும், பாதிக்கப்பட்ட சிறுமி கண்ணூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியை வன்கொடுமை செய்ததை மூவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, சங்கீத், அபிஷேக், ஆகாஷ் ஆகியோர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.