பர்த்டே பார்ட்டிக்கு போன 15 வயது சிறுமி..!! மது ஊற்றிக் கொடுத்து பலாத்காரம் செய்த காதலன்..!! அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

Chennai Crime 2025

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இவர், தாத்தா பாட்டியுடன் தங்கிப் படித்து வந்த நிலையில், மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. பின்னர், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று சுற்றி வந்துள்ளனர். மேலும், லாட்ஜில் ரூம் போட்டு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.


மது போதையில் மயங்கி விழுந்த மாணவி

இந்நிலையில், சம்பவம் நடந்த முந்தைய நாள் மதியம் தோழிகளுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு சிறுமி சென்றுள்ளார். பின்னர், இரவு 8 மணியளவில் ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளார். வீட்டிற்கு வந்த உடனேயே அவர் மயங்கி கீழே விழுந்ததால், தாத்தா பாட்டி அதிர்ச்சியடைந்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, மாணவி போதையில் இருப்பதால் தற்போது சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறுமியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி முழு மது போதையில் மயங்கியிருந்ததும், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், எம்கேபி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வியாசர்பாடி எஸ்.ஏ. காலனி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய மணிகண்டன் என்பவர், சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

சம்பவத்தன்று தனக்குப் பிறந்தநாள் என்பதால் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவருக்கு மது ஊற்றிக் கொடுத்துள்ளார். பின்னர், போதையில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், மணிகண்டனை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டன், சிறையில் அடைக்கப்பட்டார்.

Read More : தனது மகளின் தோழியை கர்ப்பமாக்கிய தந்தை..!! விளையாட சென்ற 13 வயது சிறுமி வயிறு வலியால் துடித்த சோகம்..!!

CHELLA

Next Post

8வது சம்பளக் குழு + DA உயர்வு + போனஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ரெடியாகும் தீபாவளி பரிசு..!!

Mon Sep 29 , 2025
8th Pay Group + DA hike + Bonus.. Diwali gift ready for central government employees..!!
Central govt staff 2025

You May Like