கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், ஆன்லைன் காதலில் சிக்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம் கார்த்திக் என்பவருடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டது. இந்த ஆன்லைன் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஜூன் மாதம், கார்த்திக் அந்த மாணவியை மதிய உணவிற்காக உணவகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அந்த மாணவியை வலச்சில் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வைத்து அந்த மாணவியை கார்த்திக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர் ராகேஷ் சல்தானாவும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலை கார்த்திக் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, பின்னர் அதனை மற்ற நண்பர்களுக்கும் பரப்பியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், மங்களூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
இதையடுத்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கார்த்திக், ராகேஷ் சல்தானா மற்றும் வீடியோவைப் பரப்பிய ஜீவன், சந்தீப், ரக்ஷித், சிரவன், சுரேஷ் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் ஒரு சிறுமி என்பதால், போக்சோ மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : ஆண்ட்டியை விட்டு வைக்காத இளைஞன்..!! உண்மை தெரிந்தும் ஓயாத உல்லாசம்..!! கடைசியில் திடுக்கிடும் சம்பவம்..!!



