ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்காக, தென் கிழக்கு ரயில்வே (South Eastern Railway – SER), தற்போது அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சிப் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், நாடு முழுவதும் காலியாக உள்ள மொத்தம் 1,785 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சிப் பணிகள் அனைத்தும் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இருக்கும்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன், தேசிய அல்லது மாநில தொழிற்பயிற்சிக் கவுன்சில் (NCVT / SCVT) வழங்கிய ஐ.டி.ஐ. (ITI) தேர்ச்சிச் சான்றிதழும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2026 நிலவரப்படி, விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 15 வயதிலிருந்து அதிகபட்சம் 24 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி, பட்டியல் சாதிகள்/பழங்குடியினருக்கான (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் இராணுவ வீரர்கள் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள், தென் கிழக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrcser.co.in என்ற முகவரியில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள், 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தரவரிசைப்படுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதைத் தொடர்ந்துச் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். ஆனால், பெண்கள் மற்றும் இதர இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 17, 2025-க்குள் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : ஆச்சரியம் ஆனால் உண்மை..!! உலகில் நதியே இல்லாத நாடுகள் எது தெரியுமா..? எப்படி உயிர் வாழ்கிறார்கள்..?



