மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணிகளுக்கான போட்டித் தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயமான டிஎன்பிஎஸ்சி (TNPSC), அவ்வபோது அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முறையான அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகளை நடத்தி வருகிறது.. தேர்வுகளில் வெற்றி பெறும் தேர்வர்கள் அரசு வேலைகளில் நியமிக்கப்படுகின்றனர்..
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு குரூப் தேர்வுகளும், விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, பணிக்கான தரம் மற்றும் நேர்காணல் போன்ற அம்சங்களில் வேறுபடும். குரூப் 1, 2, 3, 4 தவிர, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு போன்ற துறைகள் சார்ந்த தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணிகளுக்கான போட்டித் தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.. அதன்படி, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் கள உதவியாளர் பணிக்கான 1794 காலியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நடைபெற உள்ளது.. இந்த தேர்வு, நவம்பர் 16-ம் தேதி காலை மற்றும் தேர்வு நடைபெறும்..
தேர்வர்கள் இன்று முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..