மொராக்கோவின் பழமையான நகரங்களில் ஒன்றான ஃபெஸ் நகரில் புதன்கிழமை இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.. மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.. சில காலமாக கட்டிடங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.. அதன் அருகிலுள்ள நான்கு மாடி கட்டிடங்கள் இரண்டும் ஒரே இரவில் இடிந்து விழுந்ததாக ஃபெஸில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த 2 கட்டிடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தன. இந்த சம்பவத்தில் குறைந்தது 16 பேர் காயமடைந்தனர்.. மொராக்கோவில் வறுமை மற்றும் பொது சேவைகள் மீதான போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து சமீபத்திய கட்டிட இடிபாடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் ஃபெஸில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் இடிபாடுகளுக்குள் இன்னும் சிக்கியிருக்கக்கூடிய மற்றவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : 98 அடி உயர சுனாமி, 1,99,000 பேர் இறக்கலாம்.. ஜப்பானின் மெகா நிலநடுக்க எச்சரிக்கை..! இந்தியாவுக்கு ஆபத்தா?



