பிரபல நிறுவனங்களின் கணினி அமைப்புகள் தொடர்ச்சியாக ஹேக் செய்யப்படுவதால், உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து, கூகுள் நிறுவனம் அதன் 2.5 பில்லியன் G-mail பயனாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் கூகுள் நிறுவனம், தனது பயனாளர்களுக்கு phishing (மோசடி மின்னஞ்சல் தாக்குதல்) நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை அனுப்பியது. பயனாளர்களிடம் அவர்களின் லாக்கின் விவரங்களை ஏமாற்றி பெற இந்த மோசடி முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
கூகுள் நிறுவனம் கூறுகையில், “ShinyHunters” என்ற ஹேக்கர் குழு இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. அவர்கள் தற்போது “Data Leak Site (DLS)” ஒன்றை ஆரம்பித்து, பயனாளர்களிடம் அழுத்தம் கொடுத்து பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த மோசடி குழுவினர் shinycorp@tuta.com, shinygroup@tuta.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில் தான், Gmail அக்கவுண்ட் வைத்திருப்போர் தங்களது பாஸ்வோர்டை உடனே மாற்ற வேண்டும் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. சுமார் 2.5 பில்லியன் கணக்குகளின் டேட்டாக்கள் திருடப்பட்டதை தொடர்ந்து, பயனர்களுக்கு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இது நேரடியாக பயனர்களை பாதிக்காது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.