குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரிட்ட சாலை விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சுரேந்திநகர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்றி மாலை 2 கார்கள் சென்றுகொண்டிருந்தன. இதில் ஒரு காரில் 7 பேரும் மற்றொரு காரில் 3 பேரும் பயணித்தனர். டிடாரா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இரு கார்களும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் பள்ளத்தில் கவிழ்ந்த டிசையர் கார் தீப்பற்றி எரிந்தது. அதில் சிக்கியிருந்த ஐந்து பெண்கள், ஒரு ஓட்டுநர், 10 மாதக் குழந்தை, 13 வயது சிறுமி உள்பட எட்டு பேரும் உயிருடன் கருகி பலியானார்கள்.
மற்றொரு காரில் வந்த மூன்று பேர் சிறிய காயங்களுடன் தப்பி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விபத்துக்கு அதிவேகமே காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சாலை விபத்தில் ஒரே குடும்பஹ்ட்தை சேர்ந்த எட்டு பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.