தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.. அதன்படி பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. மேலும் கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. அன்றைய தினமே பெரம்பூரில் இருந்து தனது பிரச்சாரத்தையும் விஜய் தொடங்கினார்..
பெரம்பூரில் பிரச்சாரத்தை முடித்த விஜய் கெளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி சில நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார். அன்றைய தினம் அறிவிக்கப்பட்ட 4 இடங்களில் 2 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்யவில்லை. முதல் நாளிலேயே விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
நேற்றைய தினம் திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவில், தன் மீது இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பெரம்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியது மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல இடையூறாகக் கூட்டத்தைக் கூட்டியது போன்ற புகார்களின் கீழ் 5 பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2025-இல் மதுரையில் நடைபெற்ற தவெக-வின் இரண்டாவது மாநில மாநாட்டின் போது, மேடை அருகே வந்த ஒரு தொண்டரைப் பாதுகாவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் விஜய் மற்றும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த மனுவில் இரண்டு வழக்குகளையும் விஜய் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.
Read more: மீண்டும் திமுக ஆட்சி தான்.. தவெகவுக்கு எந்த இடம்..? அதிமுக சறுக்கியது ஏன்..? பரபர சர்வே முடிவுகள்..!



