நாடு முழுவதும் 2 கோடி ஆதார் நீக்கம்.. இது தான் காரணம்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…

Aadhaar number

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும்.


இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை ஒரு தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறிவிட்டது. அரசுப் பலன்கள் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை, 12 இலக்க தனித்துவ எண் கொண்ட ஆதார் அட்டை கட்டாயம் தேவை. 

இந்த நிலையில் நாடு முழுவதும் 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.. மோசடிகளை தடுக்கும் நோக்கில் உயிரிழந்தவர்களின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 142 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆதார் அடையாள அட்டை பெற்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.. ஒரு நபரின் ஆதார் எண்களை கொண்டு, நலத்திட்டங்களை மோசடியாக பெறுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது..

Read More : ஆதாரில் வருகிறது அதிரடி அப்டேட்..!! இனி எல்லாமே QR கோடு தான்..!! டிசம்பர் முதல் அமல்..!!

RUPA

Next Post

செங்கோட்டையனுக்கு தவெகவில் வெயிட்டான பதவி.. விஜய் எடுக்கப் போகும் முக்கிய முடிவு!

Wed Nov 26 , 2025
அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. மேலும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.. இதையடுத்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இணைக்கும் பணியில் அவர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இந்த சூழலில் […]
Vijay Sengottaiyan 2025

You May Like