தமிழில் ஹரிஷ் கல்யான், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது..
2023-ம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டது.. தமிழில் ஹரிஷ் கல்யான், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.. அதன்படி, பார்க்கிங் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. சிறந்த திரைக்கதைக்கான விருதும் பார்க்கிங் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. சிறந்த துணை கதாப்பாத்திரத்திற்கான விருது எம்.எஸ். பாஸ்கருக்கு பார்க்கிங் படத்திற்காக கிடைத்துள்ளது.
வாத்தி படத்திற்காக ஜி.வி. பிரகாஷிற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்படுகிறது.. சிறந்த மலையாள படத்திற்கான விருது உள்ளொழுக்கு படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது..
ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளது.. இயக்குனர் அட்லீ இந்த படத்தை இயக்கி இருந்தார்.. 33 ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கான தேசிய விருதை வாங்கி இருந்தார்..
12th fail படத்திற்காக விக்ராந்திற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது..
Mrs. Chatterjee Vs Norway படத்திற்காக ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது..
ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த இசை இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது..
சாம் பகதூர் படத்திற்கு சிறந்த ஒப்பனை மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது..
Rocky Aur Rani Kii Prem Kahaani படத்திற்காக வைபவி மெர்ச்சண்டிற்கு சிறந்த நடன அமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.