2 வருடங்களாக நரக வேதனை..!! பிளஸ்1 மாணவனுடன் 14 பேர் ஓரினச்சேர்க்கை..!! கேரளாவையே உலுக்கிய சம்பவம்..!!

male child abuse

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவன், தனது செல்போனில் ஓரினச்சேர்க்கை தொடர்பான ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளான். இதன் மூலம், அவனுக்குப் பல வாலிபர்கள் மற்றும் திருமணமான ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம், நாளடைவில் சிறுவனுக்குப் பெரும் துன்பத்தைத் தந்துள்ளது.


அந்த செயலி மூலம் அறிமுகமானவர்கள், சிறுவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். முதலில் இதற்கு சிறுவன் மறுத்துள்ளான். பின்னர், அங்குள்ள விடுதிகள் மற்றும் தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக இந்த கொடுமை தொடர்ந்த நிலையில், சிறுவன் இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளான்.

சமீபத்தில், ஒரு நபர் சிறுவனின் வீட்டிற்கு வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது, சிறுவனின் தாய் வருவதை கண்டதும், அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். மகனிடம் தாய் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடூரமான அனுபவங்களை அழுது கொண்டே கூறியுள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய சிறுவனிடம் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த செயலி மூலம் 14 பேர் சிறுவனுக்கு அறிமுகமான நிலையில், அவர்களில் 21 வயது முதல் 51 வயது வரை உள்ளவர்களும், திருமணம் ஆனவர்களும், குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களும் அடங்குவர். இரண்டு ஆண்டுகளாக இந்த கும்பல் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் அரசு அதிகாரி, காவல்துறை அதிகாரி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரி, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என பலரும் உள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read More : நீங்க இந்த அட்டையை வாங்கிட்டீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க..!! ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்..!!

CHELLA

Next Post

வாக்கு திருடர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்.. உறுதியான ஆதாரம் இருக்கு.. புது குண்டை தூக்கிப் போட்ட ராகுல்காந்தி..!

Thu Sep 18 , 2025
ஆளும் பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த பரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இன்று ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தேர்தல் நடக்கும் போதெல்லாம் லட்சக்கணக்கான வாக்குகளை நீக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். வாக்குத்திருட்டு தொடர்பாக 100 சதவீத ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நான் முன் வைக்கிறேன். வாக்குத் திருட்டுகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாத்து […]
rahul gandhi cec

You May Like