மியான்மரில் புத்த மடாலயம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்..
மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. 2021 பிப்ரவரியில் நடந்த இராணுவப் புரட்சிக்குப் பிறகு, ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கத்தை ராணுவம் கலைத்தது. ராணுவப் புரட்சிக்குப் பிறகு, மியான்மரில் நிலைமை மோசமடைந்துள்ளது. ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, ஆனால் அவை இராணுவத்தால் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன.
ராணுவ ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மீறுவதாக சர்வதேச அளவில் விமர்சிக்கப்படுகிறது. ராணுவ ஆட்சி, உள்நாட்டுப் போரைத் தூண்டி, நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைத்துள்ளது.
உள்நாட்டு போரில் மத்திய சாகிங் பகுதி குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இராணுவ ஆட்சி ஆயுதக் குழுக்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களால் கிராமங்களைத் தாக்கி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் லின் டா லு கிராமத்தில், பொதுமக்கள் தங்கியிருந்த புத்த மடாலயம் மீது வான்வழித் தாக்குதல் நடந்தது. இதில் 3 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.
இருவர் காயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிரான போராளி இதுகுறித்து பேசிய போது”ஒரு புத்த மடாலயத்தில் தங்குவது பாதுகாப்பானது என்று அவர்கள் நினைத்தார்கள்,” ஆனால் அவர்கள் எப்படியும் குண்டுவீசித் தாக்கப்பட்டனர். மடாலய மண்டபம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.
சாகாயிங் பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபோது சாகாயிங் பகுதி கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது. இதில் கிட்டத்தட்ட 3,800 பேர் உயிரிழந்தனர்.. ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக இருந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்குழுவிற்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் சண்டைகள் தொடர்ந்து நடந்து வருகிறது…
Read More : உலகம் முழுவதும் வேகமாக பரவும் புதிய கோவிட் மாறுபாடு ஸ்ட்ராடஸ்.. இது ஆபத்தானதா?