தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2,000 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரம்: கூட்டுறவு வங்கி, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கம், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்களில் உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.23,640 முதல் தொடங்கி அதிகபடியாக ரூ.96,395 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு: உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 01.07..2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 01.07.2007 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 10+2+3 என்ற முறையில் டிகிரி தகுதியை பெற்றிருக்க வேண்டும் மேலும், கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
கூட்டுறவு சாரந்த டிகிரி முடித்தவர்கள் கூட்டுறவு பயிற்சி தகுதியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். விண்ணப்பதார்கள் பள்ளி படிப்பு அல்லது கல்லூரி படிப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருந்த்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கூட்டுறவு சங்க பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு முறையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு தரத்தில் 200 கேள்விகளுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்வு நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இடஒதுக்கீட்டை சார்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசின் கீழ் கூட்டுறவு சங்கங்களில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்னப்பிக்க விரும்பும் நபர்கள் அந்நந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் (DISTRICT RECRUITMENT BUREAU-2025) மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025 மாலை 5.45 மணி வரை.
Read more: பிளஸ் 2 தேர்வில் முதலிடம்.. IAS அதிகாரி ஆக ஆசைப்பட்ட பிரபல நடிகை..! யார் தெரியுமா..?