பெண் தெய்வமான பராசக்தியின் முக்கிய வடிவங்களில் ஒன்றாக காளி விளங்குகிறாள். “காளி” என்றால் காலம் அல்லது கருப்பு என பொருள்படும். காளி தீங்கு செய்பவர்களுக்கு மிகவும் முக்கியமான தெய்வமாக விளங்குகிறாள். இந்தியாவில் பல காளி கோயில்கள் உள்ளன; அதில் ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் முக்கியமானதாகும்.
கோயில் முக்கிய அம்சங்கள்: ஈரோடு நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்தியூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. 12-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் பூரணமாய்க் கட்டியதாகக் கூறப்படுகிறது. கோயிலின் கல்வெட்டுகளில் மீன் சின்னம் அதற்கான சான்றாக உள்ளது. “பத்திர” என்பது இலை, பாதுகாப்பு, அழகிய உருவம் என பொருள்; எனவே, பத்ரகாளி அழகிய தோற்றம் கொண்டவர், மக்களை பாதுகாக்கும் அம்மன் என விளங்குகிறார்.
கருவறையில் பத்ரகாளி 8 கைகளுடன் மகிஷாசுரனை வென்று காட்சியளிக்கிறார். எட்டு கைகளில் உடுக்கை, கபாலம், சூலம், கட்கம், நாகம், மணி கிண்ணம் போன்ற வஸ்துக்கள் கையாளப்படுகின்றன. அக்னிகுண்டம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணம், கல்வி, தொழில் தொடர்பான விசயங்களில் அம்மனிடம் வாக்கு கேட்டு செயல்படுவதும் வழக்கம்.
பக்தர்களின் நம்பிக்கை: பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க தாலியையே காணிக்கையாக அளிக்கின்றனர். மந்தமாக செயல்படும் பக்தர்கள் தீர்த்தம் குடித்து சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என நம்பப்படுகிறது.
ராகு காலத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடினால், திருமண தடை நீக்கம், குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, செல்வ வளம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. சனி தோஷம் பிரச்சனை உள்ளவர்கள் வீர ஆஞ்சநேயர் சன்னதியில் வணங்கி நிவாரணம் பெறுவர்.
Read more: தினமும் ரூ.45 முதலீடு செய்தால் ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம்.. சூப்பரான எல்ஐசி திட்டம்..!!