கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் அன்மோல் ஜெயின் (580 புள்ளி), ஆதித்யா மல்ரா (579), சவுரப் சவுத்தரி (576) அடங்கிய இந்திய அணி, 1735 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
ஆண்கள் தனிநபர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அன்மோல் ஜெயின், 580 புள்ளிகளுடன் 7 வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான ஆதித்யா மல்ரா (579), சவுரப் சவுத்தரி (576) முறையே 13, 21வது இடம் பிடித்து ஏமாற்றினர். அடுத்து நடந்த பைனலில் ஏமாற்றிய அன்மோல், 155.1 புள்ளியுடன் 6வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். சீனாவின் ஹு ஹாய் (241.6 புள்ளி) தங்கம் வென்றார்.
ஜூனியர் ஆண்கள் தனிநபர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோனாதன் கவின் அந்தோணி (582.20 புள்ளி), முகேஷ் (582.18), கபில் (579.15) முறையே 2, 3, 4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். அடுத்த நடந்த பைனலில் அசத்திய கபில், 243.0 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் கவின் (220.7) வெண்கலம் வென்றார்.
ஜூனியர் ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் கவின் (582.20), கபில் (579.15), விஜய் தோமர் (562.18) அடங்கிய இந்திய அணி 1723.53 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.
Readmore: போராடி வந்த தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது…! கதறி அழும் பிள்ளைகள்…! மதுரையில் பரபரப்பு…!