ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள எய்மஸ் மங்களகிரி மருத்துவக் கல்லூரி விடுதியில் திடீரென வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பரவிய சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த 3 நாட்களாக இந்த அறிகுறிகளால் 25 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் பரவலுக்கான முக்கிய காரணமாக குடிநீரில் ஏற்பட்ட மாசுபாடு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அவசர விசாரணையை தொடங்கி, நீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
விடுதியில் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி
இந்த சம்பவம் எய்மஸ் மங்களகிரி விடுதியில் ஏற்பட்டது. 3 நாட்களுக்கு முன்பு விடுதியில் வசிக்கும் மாணவர்கள் பலர் திடீரென கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக புகார் அளித்தனர். உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மொத்தமாக 25 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் உள்ளனர்.. நோயின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அவர்கள் அனைவரும் தனி வார்டில் சேர்க்கப்பட்டு கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்ப சிகிச்சைக்கு பிறகும் சிலருக்கு அறிகுறிகள் தொடர்ந்ததால், இந்த நோய் பரவல் குறித்து அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
குடிநீர் மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம்
இந்த நோய் பரவலுக்கு காரணம் மாசுபட்ட குடிநீர் இருக்கலாம் என்ற சந்தேகம் அதிகாரிகளிடம் எழுந்துள்ளது. இதனால் விடுதியில் பயன்படுத்தப்படும் நீர் எங்கிருந்து வருகிறது என்பதையும் அதன் சேமிப்பு மற்றும் விநியோக அமைப்புகளையும் அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். விடுதி குழாய்கள், நீர் தொட்டிகள் மற்றும் மற்ற விநியோக பகுதிகளில் இருந்து சுமார் 40 நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் தற்போது ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்படுகின்றன. இதில் கிருமிகள் அல்லது வேதியியல் மாசுபாடு உள்ளதா என்பதை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கைகள்
இந்த சம்பவத்துக்குப் பிறகு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் எய்ம்ஸ் மங்களகிரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தனியாக பிரித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பரிசோதனை முடிவுகள் வரும் வரை அந்த பகுதியில் உள்ள நீரை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மாற்று குடிநீர் வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் விடுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யப்படுவதும் கிருமிநாசினி தெளிப்பதும் நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் நோய் மேலும் பரவாமல் தடுக்கவும், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது.
Read More : தலையணை இல்லாமல் தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா..? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்..?



