பொதுத்துறை வங்கியான பரோடா வங்கி தனது கிளை அலுவலங்களில் காலியாக உள்ள 2500 உள்ளூர் அதிகாரி காலியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்: உள்ளூர் அதிகாரி- 2,500 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாநில வாரியாக பார்த்தால் தமிழ்நாடு – 60, கேரளா – 50, கர்நாடகா – 450, மகாராஷ்டிரா – 485, குஜராத் – 1,160 , ஒடிசா – 60 என 18 மாநிலங்களில் உள்ள பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப் படிப்பு. மேலும் தாய் மொழியில் வாசிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். மேலும், மண்டல ஊரக வங்கி (அல்லது) அட்டவணை வணிக வங்கிகளில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு: வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2025 தேதியின்படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கிட்டின் அடிப்படையில் சில பிரிவுகளுக்கேற்ப வயது தளர்வுகள் உண்டு. SC/ST, பிரிவினருக்கு 5 ஆண்டு தளர்வு, ஒபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையிலான தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பள விவரம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அடிப்படை சம்பளமாக ரூ.48,480 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர செலவினங்கள் சேர்த்து மாதம் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் முறை: தேர்வு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலமாக நடத்தப்படும், பின்னர் நேர்காணல் அல்லது குழுக் கலந்துரையாடல் நடை பெறும். ஆன்லைன் தேர்வு 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்; இதில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் வகுப்பினர் குறைந்தபட்சம் 35% மதிப்பெண்களை பெற வேண்டும். தேர்ச்சி பெறுபவர்கள் மொழி தகுதிக்கான தேர்விலும் தகுதி பெற வேண்டும்.
கடைசி தேதி: விண்ணப்பிக்க கடைசி நாள் 03.08.2025 ம் தேதியாகும். மேலும், விவரங்களுக்கு bankofbaroda.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Read more: திருமண ஆசை காட்டி பெண்ணுடன் உல்லாசம்.. பாஜக MLA மகன் மீது காவல் நிலையத்தில் பரபர புகார்