ஒரு காலத்தில் இலவச இன்கமிங் மற்றும் இலவச ரோமிங் என பல வசதிகளை பி.எஸ்.என்.எல்தான் அறிமுகம் செய்தது. அதன் மூலம் தொலைத்தொடர்பு சேவை கட்டணங்கள் மிகவும் மலிதாக மாறின. ஆனால், பின்னாட்களில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
தற்போது தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சிக்கு வழிவகுக்கும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தையொட்டி அதிரடியான சலுகையை அறிவித்துள்ளது. முன்னணி டெலிகாம் நிறுவனங்களைச் சவாலுக்கு அழைக்கும் விதத்தில், வெறும் ஒரு ரூபாய்க்கு முழு மாத இணையம் மற்றும் அழைப்பு சேவையை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சுதந்திர தின சிறப்பு ஆஃபர் ஆகஸ்ட் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு பயனர்களுக்கு கிடைக்கும். இதில் சேரும் பயனாளிகள் ஒவ்வொரு நாளும் 2ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் குரல் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அனுபவிக்க முடியும். மேலும், இலவச சிம் கார்டும் வழங்கப்படும்.
இந்த திட்டம் புதிய BSNL பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் . அதாவது, தற்போது BSNL இல் புதிய இணைப்பை எடுக்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த சிறப்பு சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பழைய வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள். அதாவது, அவர்கள் இந்தத் திட்டத்தைப் பெற மாட்டார்கள். இது தவிர, புதிய பயனர்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதற்காக, நிறுவனம் இலவச சிம் கார்டையும் வழங்குகிறது.
இந்த திட்டம் முக்கியமாக கிராமப்புறங்கள் மற்றும் வருவாய் குறைவான குடும்பங்கள் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இணையமும், தொலைபேசி வசதியும் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பிஎஸ்என்எல் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.
சலுகையை பெற, பிஎஸ்என்எல் கிளைகளுக்குச் சென்று பதிவு செய்யலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வெறும் ₹1 என்ற கம்மி கட்டணத்தில் இவ்வளவு வசதிகள் வழங்கப்படுவதால், இந்த திட்டம் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டால் பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் அதன் பழைய புகழை மீட்டு எடுக்க முடியும் என கூறப்படுகிறது.
Read more: ஆபத்தான பெருங்குடல் புற்றுநோயின் 5 ஆரம்ப அறிகுறிகள்.. இவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீங்க..