மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியையும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணத்தையும் ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கிறது. தீபாவளிக்கு முன் அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும், அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரிக்கலாம். இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக அதிகரிக்கும். இந்த உயர்வு ஜூலை 2025 முதல் பொருந்தும். இதன் பொருள் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை அவர்களின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்.
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வை மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இது ஜூலை முதல் பொருந்தும். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரக்கூடும்..
சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? பணவீக்க விகிதம் நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-W) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது அதன் 12 மாத சராசரி தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரித்தால்.. பஞ்சப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக அதிகரிக்கும். ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ. 50,000 என்றால்.. அவர்களின் பஞ்சப்படி ரூ. 27,500ல் இருந்து ரூ. 29,000 ஆக அதிகரிக்கும். அதாவது, அத்தகைய நபரின் சம்பளம் ஒவ்வொரு மாதமும் ரூ. 1500 அதிகரிக்கும்.



