ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள டாச்சிகாம் வனப்பகுதியின் மேல் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதிகாலையில் அப்பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் காவல்துறையினர் மேற்கொண்ட பெரிய அளவிலான கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த மோதல் நடந்தது. கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய வெளிநாட்டினர் என்பதை உயர் புலனாய்வு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த என்கவுண்டர் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தினர். ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Read more: திமுகவினரின் வருமானத்துக்குப் பொதுமக்கள் உயிர்பலி கொடுக்க வேண்டுமா? அண்ணாமலை அட்டாக்..