பஞ்சாப் மாநிலத்தில் 3-ஆவது திருமணம் செய்துகொண்டு காதலனுடன் இளம்பெண் ஓடிய நிலையில், அவரது 6 வயது மகளை தாத்தா – பாட்டியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. காதலனுடன் செல்லும் முன் அந்த இளம்பெண், தன்னுடைய 6 வயது மகளை பெற்றோரிடம் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், தாயைக் காணாததால் அந்த சிறுமி அடம் பிடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தாத்தா – பாட்டி சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோர கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர்..
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியை கொலை செய்ததை தாத்தா – பாட்டி ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : சொந்தமா தொழில் தொடங்க ஆசையா..? தற்போதைய டிரெண்டிங் பிசினஸ் எது..? வருமானம் அள்ளலாம்..!!