மத்திய மும்பை கலாசௌகி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த 3 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக 25 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த 4 சிறுவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குற்றவாளிகளில் ஒருவரின் காதலி, பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு, தனது காதலனுடன் உறவு வைத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே சிறுமியின் செல்போனை வாங்கி பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த சிறுமி சில நபர்களுடன் உடலுறவு வைத்திருப்பதற்கான வீடியோ இருந்துள்ளது. இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, 5 பேர் தன்னை மூன்று மாதங்களாக பலாத்காரம் செய்து வந்ததாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆடிப்போன பெற்றோர், சிறுமியை அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேருக்கும் எதிராக போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பான கூடுதல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More : வீட்டில் எல்லோரும் ஒரே சோப்பு போட்டு குளிக்கிறீங்களா..? அதிர்ச்சி தரும் உண்மை..!! இனி தொடவே தொடாதீங்க..!!