உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது..
மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடிய வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதுவரை 8 உலகளாவிய போர்களை தீர்த்து வைத்ததற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில் மரியா கொரினாவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணிப்பதாக மரியா கூறியிருந்தார்.. மேலும் ட்ரம்புக்கு நோபல் பரிசு கிடைக்காதது குறித்து வெள்ளை மாளிகை நோபல் குழுவை விமர்சித்திருந்தது..
2025 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக” ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது..