2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும்.
அந்த வகையில் இன்று 2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த பணிக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மனித உடலில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான கண்டுபிடிப்புக்கு 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது..



