உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும்.
அந்த வகையில் நேற்று 2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த பணிக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மனித உடலில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான கண்டுபிடிப்புக்கு 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது..
2025-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் என 3 பேருக்கும் இந்த நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது..
நோபல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இவர்கள் ஒரு மீக்கடத்தி மின்சுற்றைப் பயன்படுத்தி ஒரு பரிசோதனையை உருவாக்கினர். இந்த சுற்றுடன் இணைக்கப்பட்ட சிப் சுமார் ஒரு சென்டிமீட்டர் அளவில் இருந்தது. முன்னதாக, சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீடு ஒரு சில துகள்களைக் கொண்ட அமைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டது; இங்கே, இந்த நிகழ்வுகள் பில்லியன் கணக்கான கூப்பர் ஜோடிகளுடன் ஒரு குவாண்டம் இயந்திர அமைப்பில் தோன்றின, அவை சிப்பில் முழு மீக்கடத்தியையும் நிரப்பின. இந்த வழியில், சோதனை குவாண்டம் இயந்திர விளைவுகளை நுண்ணிய அளவிலிருந்து மேக்ரோஸ்கோபிக் ஒன்றிற்கு கொண்டு சென்றது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தவறுதலாக 300 மடங்கு சம்பளம் பெற்ற ஊழியர்! வழக்கு போட்ட நிறுவனம்.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!