உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில் நடந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. 23 வயதான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண், கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஆகஸ்ட் 18ஆம் தேதி அரங்கேறியுள்ளது. அவரை 3 பேர் கொண்ட கும்பல், கடத்தி கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அந்த இளம்பெண், தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில், அங்கிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இளம்பெண் உயிரிழந்ததற்கான காரணம் பாலியல் வன்கொடுமை தான் என உறுதியானது.
இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை அளித்த போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ரோகித் (23) மற்றும் போலா (45) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மற்ற குற்றவாளிகள் 3 பேரை தனிப்படை போலீசர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியின் பல்வேறு ஆர்வலர்கள் லோனி காவல் நிலையத்திற்கு முன்பாக திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.